சபரிமலை விவகாரம்! சீமானின் கேள்வி இதுதான்

Report Print Gokulan Gokulan in இந்தியா

கேராளாவில் சபரிமலைக்கு பெண்பக்தர்கள் செல்வதை எதிர்த்து தொடர் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால் சாமி முன்பும் அனைவரும் சமம் தானே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல பாஜக உள்ளிட்ட இந்து ஆதரவு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு பெண் பக்தர்கள் சபரி மலை கோவிலிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து திரும்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுதியது.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜக சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சீமான் அளித்த பேட்டியில், பெண்மையை போற்றாத சமூகம் பெருமை அடைந்தது இல்லை என்றும், ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றால், சாமி முன்பும் அனைவரும் சமம் தானே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் ஐயப்பன் கன்னி சாமி என்றால், அனுமான் பிள்ளையாரும் கன்னிசாமி தானே என்று குறிப்பிட்ட அவர். பாஜக அரசுதான் ஐயோதியில் ராமர் கோவிலையும், கேரளாவில் ஐயப்பன் கோவிலையும் வைத்து அரசியல் செய்கின்றது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்