மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை.. இரண்டு வாரக்காலம் தள்ளிப்போன 7 தமிழர்கள் விடுதலை வழக்கு

Report Print Gokulan Gokulan in இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7பேரின் விடுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் பிழை இருப்பதால் இரண்டு வாரக் காலத்திற்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை குறித்து தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் ஒப்புதல் மனு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலையின் போது இறந்த 14பேரின் குடும்பத்தினர் 7பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றத் உத்தரவிட்டது.

இதனை அடுத்து மத்திய அரசு பதில் மனு தாக்க செய்தது. இந்நிலையில் அந்த மனுவில் பிழை இருப்பதாகவும் எனவே வழக்கை இரண்டு வாரக்காலம் ஒத்தி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers