இறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த இரட்டை குழந்தைகள்: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த குழந்தையின் வயிற்றில், சரியாக வளர்ச்சியடையாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ள சம்பவம் அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் Bhakrodh பகுதியை சேர்ந்த பூஜா குமார் என்ற பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 2.97 கிலோகிராம் எடையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து சில வாரங்கள் கழித்து குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சளி, வயிற்று வலி மற்றும் விறைப்பு உள்ளிட்டவைகளால் குழந்தை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து உடனடியாக சர் சுந்தர்லால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிற்றுக்குள் இறந்த நிலையில் இரட்டை கருக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று குழந்தைக்கு ஒன்றரை மணிநேர அறுவைசிகிசிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக கரு அகற்றப்பட்டது.

கைகள், கால்கள், வயிறு, மார்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் அந்த கருவின் புகைப்படத்தை தற்போது மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers