ஆசையாக திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திராவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சோம்பல்லி பஞ்சாயத்தை சேர்ந்தவர் வெங்கடபதி(32). இவர் தனது மைத்துனர் சுனில்வர்மாவுடன் சேர்ந்து தங்களுடைய சொந்த நிலத்தில் வீடு கட்டி ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தங்களுடைய சொந்த கிராமமான கித்தனபல்லியில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனைவரும் சேர்ந்து காரில் புறப்பட்டுள்ளனர்.

திருமணம் முடிந்து நேற்று வீடு திரும்பி கொண்டிருக்கையில், குண்டூர் அடுத்த சிலக்கலூர்பேட்டை கெட்லபாடு கிராமம் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லொறியின் மீதி, வேகமாக கார் மோதி விபத்தில் சிக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடபதி(32), இவரது தாய் பாரதி(52), சுனில் வர்மா மனைவி நாராயணம்மா(29), அவரது மகள் அஸ்வினி(2) ஆகிய 4 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தை சேர்ந்த கிராமமக்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்தில் படுகாயமடைந்த வெங்கடபதி மனைவி சவுந்தர்யா, சுனில்சர்மா மற்றும் அவரது மற்றொரு மகள் ஜான்வி ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார், வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers