எதிர் வீட்டு இளைஞனுடன் தொடர்பு.. புத்தாண்டு தினத்தால் வந்த வினை!

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் எதிர் வீட்டு வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மனைவியை கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

கும்பகோணத்தின் திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன், இவரது மனைவி கொடியரசி, இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களது வீட்டின் எதிர்வீட்டில் இருந்த பார்த்திபன் என்ற வாலிபருக்கும், கொடியரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இது தெரிந்த செந்தில்குமார் மனைவியை கண்டித்துள்ளார், இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று பார்த்திபனுடன் கொடியரசி பேசியுள்ளார்.

இதை பார்த்த செந்தில்குமார் கோபத்தின் உச்சத்திற்கு செல்ல நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சண்டையிட்டுள்ளனர்.

இதில் ஆத்திரத்தில் இருந்த செந்தில்குமார் உறங்கிக் கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்துள்ளார்.

வலியால் கொடியரசி கதறி துடிப்பதை பார்த்தவுடன் பயத்தில் மது பாட்டிலால் தன்னுடைய வயிற்றையும் கிழித்துக் கொண்டார்.

இதில் குடல் சரிந்து ரத்தம் வெளியேற, விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பனந்தாள் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers