சிகிச்சைக்காக வந்த பெண்ணின் வயிற்றுக்குள் நாப்கின் வைத்து சர்ஜரி! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது மனைவியின் வயிற்றுக்குள் சானிட்டரி நாப்கின் வைத்து தைத்துவிட்டதாக கணவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு அஜிதா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு அஜிதா மகப்பேறு சிகிச்சைக்காக அங்கிருக்கும் தனியார் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, அந்த மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய வசந்தாமணி, அஜிதாவுக்கு அறுவைசிகிச்சை செய்ததாகவும், அப்போது, அவர் வயிற்றுக்குள் சானிட்டரி நாப்கினை வைத்து தைத்து விட்டதாகவும் டீன் வசந்த மணி பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அவரது கணவர் மகேஷ் அளித்துள்ளார்.

டீன் மீது புகார் அளித்த தம்பதி

மேலும், வசந்தாமணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து வசந்தாமணியிடம் கேட்ட போது கடந்த 2012-ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய போது அஜிதா என்ற பெண் அனுமதிக்கப்பட்டது உண்மை தான், ஆனால் அவர் சிகிச்சைக்கு பின் நல்ல உடல்நலத்துடன் தான் வீடு திரும்பினார்.

அதன் பிறகு, வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவிட்டு, எட்டு மாதங்களுக்குப் பிறகு நான் அளித்த சிகிச்சையால்தான் இப்படி நடந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு மருத்துவர்மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நான் அப்போதே மருத்துவக் கவுன்சிலில் புகார் கொடுத்திருந்தேன். கமிஷனர் அலுவலகத்தில் எனக்கு பாதுகாப்பும் கேட்டிருந்தேன். தற்போது மாங்காட்டைச் சேர்ந்த பெண் புகார் கொடுத்திருப்பதால், மீண்டும் நெருக்கடி கொடுக்கலாம் என்று பார்ப்பதாக கூறியுள்ளார்.

டீன் வசந்தமணி

சாத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதேபோன்று பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 27 வயது பெண் புகார் அளித்தார்.

ஆனால், இந்தப் புகாரை டீன் வசந்தாமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers