கணவனை இழந்து பேஸ்புக் மூலம் வேறொரு நபரை திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை! பரிதாப சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்த நிலையில், தற்போது தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இராணுவ வீரரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை அவுல்கார் தெருவைச் சேர்ந்த சித்ரா. இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற ராணுவ வீரரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஜீவனா மற்றும் சஞ்சனா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.

இதனால் சித்ரா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்த போது, பேஸ்புக் மூலம் தேனி மாவட்டடம் சின்னமனூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற இராணுவ வீரர் பழக்கமாகியுள்ளார்.

முதலில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், அதன் பின் காதலிக்க ஆரம்பித்தனர். பேஸ்புக்கில் பேசிக் கொண்டிருந்த இவர்கள், அதன் பின் போனில் அதிகமாக பேச ஆரம்பித்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 15-ஆம் திகதி திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீராமுடன் அலகாபாத் சென்ற சித்ரா, அங்குள்ள இராணுவ விடுதியில் 6 மாதம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இருவரும் ஊருக்கு திரும்பிய நிலையில், தமது கணவருக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், கணவரை தம்முடன் சேர்த்து வைக்கக் கோரி, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers