கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட கர்ப்பிணி மாடு

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி மாடு ஒன்று கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பித்தபுரம் பகுதியில் ஒரு பால் பண்ணை அமைந்துள்ளது.

இதன் உரிமையாளர் நாமா புச்சிச்சராஜு, ஞாயிற்றுக்கிழமை பண்ணையில் இருந்து காணமல் போன கர்ப்பிணி பசுமாடு ஒன்றினை தேடி திரிந்துள்ளார்.

அப்போது சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மாடு கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். அதனை அவிழ்க்க முற்படும்போது பிறப்புறுப்பில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்த அவர், உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்,

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு பாதிக்கப்பட்ட மாட்டை மீட்டு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர், மாடு துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னதாக ஜூலை 25 ஆம் தேதி ஹரியானாவின் மரோடா கிராமத்தில் கர்ப்பிணி ஆட்டை துஸ்பிரயோகித்து கொன்றதாக கொன்றதாக 8 ஆண்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்