அப்புறம் எனக்கு பசிக்கும்ல.. இணையத்தில் வைரலான தமிழக சிறுவனின் க்யூட் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

சங்கத்தை விட சோறு தான் முக்கியம் என சிறுவன் பேசும் வீடியோவின் முழு காட்சியும் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய காலத்தை பொறுத்தவரை யாராக இருந்தாலும் இணையத்தின் மூலம் எளிதாக பிரபலமாகி விடலாம்.

நல்லதோ! கெட்டதோ வீடியோ பிடித்துவிட்டால் இணையதளவாசிகள் அதனை வைரலாக்கி விடுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, "அடிக்கமா குணமா வாயில சொல்லணும்" என ஒரு குழந்தை பேசும் வீடியோ காட்சி இணையம் முழுவதும் பரவியது. அதனை தொடர்ந்து ஊடகங்கள் அனைத்தும் நேரிடையாக பேட்டியெடுத்து செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் ஆண்டின் இறுதி நாளில், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன், "சங்கத்தை விட சோறுதான் முக்கியம்" என பேசும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனை சினிமா பிரபலங்கள் துவங்கி பலரும் இணையதளத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்