ஜாமீனில் வெளிவந்தவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம்: கள்ளக்காதலி கைது

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் கள்ளக்காதலியின் மகனை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இளைஞரை சிறுவனின் தாயே கொலை செய்துள்ளது தெரியவந்ததுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திகேயன் - மஞ்சுளா தம்பதியினருக்கு 10 வயதில் ரித்தேஷ் என்ற மகன் இருந்தான்.

மஞ்சுளாவிற்கும் அதே அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததை தெரிந்துகொண்ட கார்த்திகேயன் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பொலிஸார் கைது செய்து சிறையில் 15 நாட்கள் சிறையில் அடைத்ததால் ஆத்திரமடைந்த நாகராஜ், கார்த்திகேயனை பழிவாங்க நினைத்தார்.

அதன்படி ஜாமீனில் வெளிவந்ததும், ரித்தேஷை கடத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தான். சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக செயல்பட்ட பொலிஸார் தலைமறைவாக இருந்த நாகராஜை விரைந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் மகனின் இறப்பிற்கு காரணமான மஞ்சுளாவை குடும்பத்தினர் அனைவரும் வெறுத்து ஒதுக்கியுள்ளனர்.

இதில் மனமுடைந்த மஞ்சுளா, மகனை கொலை செய்த நாகராஜை பழிவாங்க முடிவு செய்து ரூ.2 லட்சத்திற்கு கள்ளத்துப்பாக்கி வாங்கியுள்ளார்.ஆனால் அந்த நபர்கள் பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட பொலிஸார் மஞ்சுளா மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 மாதத்திற்கு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த மஞ்சுளா கூலிப்படையின் உதவியை தேடியுள்ளார். அப்போது அரும்பாக்ககத்தை சேர்ந்த ஷ்யாம்சுந்தர் மூலமாக 5 பேரை ஏற்பாடு செய்து 5 லட்ச ரூபாய்க்கு டீல் பேசியுள்ளார்.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த நாகராஜை 5 பேரும் சேர்ந்து வீட்டைக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மஞ்சுளா உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடியுள்ள மற்றொரு நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக மஞ்சுளா கார்த்திகேயனுக்கு முன்னதாக ஒருவரை திருமணம் செய்ததும், இரண்டு வருடத்திலே அவர் உயிரிழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்