தமிழக கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் படகு: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் கரை ஒதுங்கிய மர்மப் படகு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான் பேட்டை பகுதி கடற்கரையில், மூங்கில் படகு ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து, படகில் வெளிநாட்டினர் எவரும் வந்து இறங்கியுள்ளனரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கரை ஒதுங்கிய படகானது புத்தர் சிலை மற்றும் புத்தர் படங்களுடன் தெப்பம் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த படகா என வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், 'மியான்மர் நாட்டில் தூண்டில் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகு இதுவெனவும், இப்படகில் மீனவர்கள் குழுவாகச் சென்று பல நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கு ஏதுவாக படகு கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட பருவ மாற்றத்தால், படகு திசை மாறி வந்திருக்கலாம் எனவும், ஆனால் படகில் இருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் மர்மமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

கரை ஒதுங்கிய படகைப் பார்வையிட்ட கடலோர காவல் படை பொலிசர், படகில் மர்ம நபர்கள் வந்தார்களா என்றும்,

கடல் சீற்றத்தில் சிக்கியிருந்தாலும் படகு சேதமடையாமல் எப்படி கரை ஒதுங்கியது எனவும் படகில், சமீபத்தில் பூஜை நடந்ததற்கான பொருள்கள் இருப்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers