திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம்... கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன்! அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தீபிகா (22). இவரும் சவுரவ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா கர்ப்பமானார்.

இந்நிலையில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சவுரவ் தன்னுடைய கோரமுகத்தை காட்ட தொடங்கினார்.

மனைவி தீபிகாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினார் சவுரவ். இதையடுத்து தனது வீட்டாரிடம் சொல்லி வரதட்சணையாக பணம் கொடுத்தார் தீபிகா.

ஆனாலும் திருமணத்தின் போது தருவதாக சொன்ன நாற்காலியை தரவில்லை என மீண்டும் தீபிகாவை அடித்துள்ளார் சவுரவ்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தீபிகா குடும்பத்தாருக்கு போன் செய்த சவுரவ், தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் பதறியடித்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தீபிகா சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தீபிகா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதனிடையில் தீபிகாவை, சவுரவும் அவர் குடும்பத்தாரும் கொன்றுவிட்டதாக தீபிகா குடும்பத்தார் புகார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தீபிகா உடலில் காயம் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சவுரவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடியதை அவர் ஒப்பு கொண்டார்.

இதன் பின்னர் பொலிசார் சவுரவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர் குடும்பத்தார் இருவரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்