எச்ஐவி ரத்த தானம் வழங்கிய இளைஞரின் மரணம்: பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

Report Print Kabilan in இந்தியா

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், விஷம் குடித்து இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரை சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரத்த தானம் வழங்கிய இளைஞர் எலி மருந்தை சாப்பிட்டு பரிதாபமாக இறந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இளைஞரின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பிற மாவட்ட அரசு மருத்துவர் குழுவை நியமிக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இதன் காரணமாக நேற்றைய தினம் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை, இந்நிலையில் இன்றும் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இளைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்