பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்

Report Print Raju Raju in இந்தியா

650 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல மூத்த நடிகர் லோக்நாத் தனது 90வது வயதில் காலமானார்.

கன்னட திரையுலகில் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் போனவர் நடிகர் லோக்நாத்.

இவர் 650-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

வயது முதிர்வு நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த லோக்நாத்துக்கு நேற்றிரவு 12.10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

அவருடைய இறுதிச்சடங்குகள் திங்கட்கிழமை மதியம் 12லிருந்து 2.30 மணிவரை நடைபெறவுள்ளது.

லோக்நாத்தின் மறைவுக்கு திரையுலகினர் பலர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers