கொட்டிக்கொடுத்த அதிர்ஷ்டம்: திடீரென கோடீஸ்வரரான தொழிலாளர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மத்தியபிரதேசத்தில் இரண்டு தொழிலாளர்கள் அதிஷ்டத்தால் திடீரென கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவைச் சேர்ந்த தொழிலாளர்களான மோதிலால், ரகுவீர் பிரஜாபதி ஆகிய இருவரும் அங்கிருக்கும் வைரச் சுரங்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், கடந்த அக்டோபர் மாதம், பெரிய சைஸ் வைரம் ஒன்றை இவர்கள் கண்டெடுத்தனர். 42.59 காரட் எடை கொண்டது இந்த வைரம்.

தாங்கள் கண்டெடுத்த வைரத்தை மாவட்ட வைர அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத் தனர். இரண்டு மாதத்துக்குப் பின் அந்த வைரம், மாவட்ட வைர அதிகாரி சந்தோஷ் சிங் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.

ஒரு கேரட்டுக்கு ரூ.6 லட்சம் என்ற கணக்கில் இந்த வைரம் ரூ.2.55 கோடிக்கு ஏலம் போனது. ஜான்சியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ராகுல் ஜெயின் என்பவர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சரண் சிங்குடன் வந்து இந்த வைரத்தை ஏலத்துக்கு எடுத்துள்ளார்.

இதற்கான 20 சதவிகித பணத்தை மாவட்ட வைர அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். பாக்கித் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்குவதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி வைர அதிகாரி சந்தோஷ் சிங் கூறும்போது, வரி போக, 2.30 கோடி ரூபாய் அந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார்.

இந்த பணத்தை கொண்டு எங்கள் கடனை அடைப்போம். குழந்தைகளை நன்றாக படிக்க வைப்போம்’ என்று இரண்டு தொழிலாளர்களும் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்