காப்பாற்றுங்கள் என கதவை தட்டி கதறிய பெண்: ஆடையை களைந்து தெருவில் ஓடவிட்ட கும்பல்.... வீடியோ வெளியானதால் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் ஆடையை களைந்து இளைஞர்கள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் பஹோதி எனுமிடத்தில் இளம் பெண் ஒருவரை சில இளைஞர்கள் ஈவ் டீசிங் செய்த போது அந்தப் பெண் பலமாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் பெண்ணை அடித்து உதைத்து ஆடைகளைக் களைந்து வீதி வீதியாக இழுத்துச் சென்றனர்.

இந்த காட்சியை யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. இதனால் அந்தப் பெண் மானபங்கப்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்டாள்.

அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் கதவை தட்டியபோதும், அப்பெண்ணிற்கு யாரும் உதவி செய்யமுன்வராததால், காவல்நிலையத்தை நோக்கி சென்ற அப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், பொலிசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சில நாட்கள் கழித்து, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளாங்களில் அதிகம் பகிரப்பட்டது.

அதனை தொடர்ந்து, துரித நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், பெண்ணை பாதிப்பிற்குள்ளாக்கிய மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதில் ஒருவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மிகவும் தாமதமாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்