திருமண நேரத்தில் விஷம் குடித்த மணப்பெண்: மணமகன் எடுத்த அதிரடி முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண், முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், இரணியலை அடுத்த திங்கள் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனையடுத்து திருமண வேலைகளில் தீவிரமாக இறங்கிய இருவீட்டார்களும், பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்ததை ஒட்டி, மணமகன் வீட்டார் மணப்பெண்ணுக்கான பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்களை எடுத்து கொண்டு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களை வரவேற்க அங்கு யாரும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார் நடந்தவை பற்றி விசாரிக்கும்போது, மணமகள் விஷம் குடித்து விட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சிடையைந்த மணமகன் வீட்டார், திருமணத்தை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்து, உடனடியாக மணமகளின் உறவினர் வீட்டு பெண்ணை பேசி முடித்து மறுநாள் காலையில் மணமுடித்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்