தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பு மாயமான மணமகன்: தக்க சமயத்தில் உதவிய இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் ஆந்திராவில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் மணமகன் மாயமான நிலையில் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த இளைஞர் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் போட்லப்பள்ளி கிராமத்தில் ராஜலிங்கு மற்றும் பூலட்சுமி தம்பதிகள் தங்களது மகளுக்கு தமது உறவினரான ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞரை மணம் முடிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் ஸ்ரீனிவாஸ் மற்றொரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இச்சம்பவம் ராஜலிங்குவுக்கு தெரியவர அவர் தமது மகளுக்கு ரமேஷ் என்பவரை நிச்சயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீனிவாசின் தாயார் தமது மகனை ராஜலிங்குவின் மகளுக்கே மணம் முடிப்பேன் என உறுதியாக இருந்துள்ளார்.

தாயாரின் நிர்பந்தத்திற்கு பணிந்த ஸ்ரீனிவாஸ் திருமணத்தன்று மண மேடைக்கு மணக் கோலத்தில் சென்றுள்ளார்.

ஆனால் தாலி கட்டும் சில நிமிடங்கள் முன்பு ஸ்ரீனிவாஸ் மணப்பந்தலில் இருந்து மாயமாகியுள்ளார்.

இச்சம்பவம் இரு குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த நிலையில் ராஜலிங்கு தமது மகளுக்கு இரண்டாவதாக நிச்சயம் செய்த ரமேஷ் என்பவரின் பெற்றோரிடம் தங்கள் நிலையை எடுத்துக் கூறிய ராஜலிங்கு, அவர்களை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்.

இதனையடுத்து அதே மணப்பந்தலில் ராஜலிங்குவின் மகளுக்கும் ரமேஷுக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

மட்டுமின்றி ரமேஷின் அந்த முடிவுக்கு உறவினர்கள் அனைவரும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்