எனது மகனின் மரணத்தில் சந்தேகம்! எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞரின் தந்தை பரபரப்பு புகார்

Report Print Fathima Fathima in இந்தியா

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில், தானமாக கொடுத்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் நான்கு நாட்களுக்கு முன் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கிய நிலையில் மன உளைச்சலில் இருந்தவர் இன்று அதிகாலை காலமானார்.

இந்நிலையில் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறித்த இளைஞரின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிறமருத்துவர்களை கொண்டு செய்யவேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்