பிரசவத்திற்கு முன் மருத்துவருடன் குஷியாக நடனமாடிய கர்ப்பிணி பெண்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர், பிரசவத்திற்கு முன்பு மருத்துவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சங்கீதா ஷர்மா என்ற கர்ப்பிணி பெண், தனது இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரசவத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், அவர் பிரத்யேக உடையணிந்து தனது மருத்துவருடன் சேர்ந்து நடனமாடினார். மருத்துவமனை அறையிலேயே Girls Like To Swing என்ற ஹிந்தி பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனது பிரசவத்திற்கு முன்பு மனநிலையை சீராக்கிக் கொள்ள அவர் இவ்வாறு நடனமாடியதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து சங்கீதா சர்மா கூறுகையில், ‘இது என்னுடைய இரண்டாவது வீடியோ. நடனம் என்பது புத்துணர்ச்சி தரக்கூடியது. கர்ப்பிணி பெண்களுக்கு நடனம் ஆடுவது நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் முறையான வழிகாட்டுதலின் படி அதை நான் செய்ய வேண்டும்.

என்னை யாரும் குருட்டுத்தனமாக பின்பற்றாதீர்கள். நான் ஒரு நடனக்கலைஞர். அதனால் எனக்கு இது சாத்தியமாகவும், எளிதாகவும் இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்