எச்.ஐ.வி ரத்தம் தானமாக கொடுத்த இளைஞர்! கர்ப்பிணி பெண்ணின் நிலையை கேட்டு தினமும் புழுங்கிய பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தி, அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கர்ப்பிணி பெண் மிகுந்த வேதனையடைந்தார். இதற்கு என்னை கொன்றிருக்கலாமே என்று கூட கண்ணீர்விட்டார்.

தற்போது அவர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவர் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இன்று காலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இவர் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை படித்து பெரிய மன வருத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்த பெண் பாதிக்கப்பட்டது குறித்து இவர் அடிக்கடி விசாரித்தும் உள்ளார். தொடர்ந்து அது பற்றி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிக மன உளைச்சலில் இருந்ததால், இவருக்கு மன உளைச்சலுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக இவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மனஉளைச்சலை போக்க சிகிச்சை அளித்துள்ளனர். இரண்டு மருத்துவர்கள் இவருக்கு கவுன்சிலிங் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் என்ன பேசியும், கவுன்சிலிங் கொடுத்தும் இவர் மனநிலை சரியாகவில்லை, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு தான் காரணமாகிவிட்டதாக குற்ற உணர்ச்சியில் கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்