காதலியின் மகனை கொன்ற விவகாரம்! ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை

Report Print Fathima Fathima in இந்தியா
285Shares

சென்னையில் கள்ளக்காதலியின் மகனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர், ஜாமீனில் வெளியே வந்த போது சரமாரியமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது மனைவி மஞ்சுளா, இவர்களுகு்கு ரித்தேஷ்(வயது 10) என்ற மகன் இருக்கிறார்.

அதேபகுதியை சேர்ந்தவர் நாகராஜ், இவர் ரித்தேசுடன் சேர்ந்து விளையாடும் போது மஞ்சுளாவுடன் பழக ஆரம்பித்தார்.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாற, கார்த்திகேயன் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதை ஒருநாள் பார்த்த ரித்தேஷ், தனது அப்பாவிடம் கூறிவிட்டார், கார்த்திகேயன் கண்டிக்கவே மஞ்சுளாவை அடைய வேண்டும் என்ற நோக்கில் ரித்தேஷ்ஷை கடத்தி மறைத்த வைத்தார் நாகராஜ்.

அந்த இடம் தெரிந்து பொலிசிடம் கார்த்திகேயன் செல்ல, ஆத்திரத்தில் ரித்தேஷை நாகராஜ் கொன்றுவிட்டார்.

இதுதொடர்பான வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நாகராஜ், சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்றவர், அங்கே கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கடைக்கு வந்த மூன்று பேர் நாகராஜை அடித்து உதைத்துள்ளனர், பொதுமக்கள் சிலர் தடுக்க முயன்ற வேளை வேகமாக ஓடி வந்த இருவர், நாகராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் நாகராஜ் துடிதுடித்து இறந்துள்ளார், தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் விசாரித்த போது தான், ஜாமீனில் வெளியில் வந்தவர் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்