விரல்களை அரிவாளால் வெட்டிய தாய்! பரிதாபமாய் இறந்த குழந்தை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் குழந்தையின் கை மற்றும் காலில் ஆறு விரல்கள் இருந்ததால்,அந்த ஆறாவது விரல் மற்றும் காலின் ஆறாவது விரலை தாய் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் Khandwa பகுதியின் Sundardev கிராமத்தைச் சேர்ந்தவர் Tarabai. இவருக்கு கடந்த 22-ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது.

அப்போது குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் மற்றும் கால்களிலும் ஆறு விரல்கள் இருந்துள்ளது.

இதனால் குழந்தையின் தாய் தாராபாய் அந்த கை மற்றும் காலில் இருந்த ஆறாவது விரலை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் அந்த குழந்தை பலத்த காயம் அடைந்ததால், குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், இருப்பினும் காயம் பெரிய அளவில் இருந்ததால், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆறு விரல்கள் இருந்தால் குழந்தைக்கு எதிர்காலத்தில் திருமணம் நடக்காது என்பதற்காக குழந்தையின் தாய் இப்படி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்