மனைவியின் தங்கையுடன் தொடர்பு! வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் தன்னுடைய தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையில் மனைவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே கோதைமங்களத்தை சேர்ந்தவர் இளையராஜா, இவரது மனைவி தங்கவில்லம்மாள், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தங்கவில்லம்மாளின் தங்கை சத்யா, ராமமூர்த்தி என்பவருடன் வசித்து வருகிறார், இந்நிலையில் இளையராஜாவுக்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதை தெரிந்து கொண்ட தங்கவில்லம்மாள் இளையராஜாவை கண்டித்துள்ளார், அதற்கு தகாத உறவு தவறில்லை என நீதிமன்றமே சொல்லவிட்டதாக இளையராஜா கூறிவந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சத்யாவை இளையராஜா கடத்தி சென்றுவிட, ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த தங்கவில்லம்மாள் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

இதற்கிடையே மனைவியை காணாத துக்கத்தில் ராமமூர்த்தியும் தற்கொலைக்கு முயல நால்வரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்