எதற்காக நடிகர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறேன்? சின்மயி பதில்

Report Print Deepthi Deepthi in இந்தியா

டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதையடுத்து, நடிகர் ராதாரவிக்கும், சின்மயிக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர்.

இந்நிலையில், ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்புக் கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் புது உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வோம் என டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள சின்மயி, “ரூ.1.5 லட்சம் பணம், அத்துடன் மன்னிப்புக் கடிதம். இவற்றை டப்பிங் யூனியனுக்கு அளித்தால் மட்டுமே நான் மீண்டும் தமிழ்ப் படங்களில் பணியாற்ற முடியுமாம். 2006-ல் இருந்து எனது வருமானத்தின் மூலம் டப்பிங் யூனியன் நிறையவே பணம் சம்பாதித்திருக்கிறது. ஆனால், எனது பணிக்கான உரிமையைப் பெற நான் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டுமாம்.

பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஒன்றிரண்டு படங்களுக்குப் பேசிவிட்டாலே டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால், நான் 2006-ல் இருந்து பணியாற்றியும்கூட டப்பிங் யூனியனில் புதிய உறுப்பினராகியுள்ளேன்.

எதற்காக நான் டப்பிங் யூனியனிடமும் ராதாரவியிடமும் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறேன்? டப்பிங் யூனியன் விதிப்படி புதிய உறுப்பினராகச் சேர ரூ. 2500 தான் தொகை. ஆனால், என்னிடம் ரூ.1.5 லட்சமும் மன்னிப்பும் கேட்பதேன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers