அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன்: தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருமுருகநாதன் - பானுமதி தம்பதியனிருக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என இரு மகள்கள். இரண்டாவது மகளான தேவிப்பிரியா, இந்துக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி விழாவுக்குச் சென்றபோது அங்கு சித்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது, சுரேஷின் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட தேவிப்பிரியா, பலமுறை அவரிடம் பேசி வந்தார்.

நாளடைவில் இது காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில், தேவிப்பிரியா, நான் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்ற இன்ஜினியரிங் மாணவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அம்மாவிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளின் விருப்பத்தை ஒத்துக் கொண்டுள்ளார் பானுமதி. சில நாள்கள் கழித்து சுரேஷ் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள் எந்த சமூகம் என்று கேட்டிருக்கிறார். அப்போது, சுரேஷ் என்ன சமூகம் என்பதை தெரிந்து கொண்ட பானுமதி, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த தேவிப்பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி காதலனுடன் வசித்தார்.

நம்முடைய காதலுக்கு எனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று தேவிப்பிரியா சொல்ல, உனது அம்மாவை கொலை செய்துவிடு என்று சுரேஷ் ஐடியா கொடுத்துள்ளார். இதையடுத்து, தனது நண்பர் விவேக் மற்றும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்த தனது அம்மாவை கொலைசெய்துள்ளார் தேவிப்பிரியா.

தற்போது, தேவிப்பிரியா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷயை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன். நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்" என்று கூறியிருந்தார். பானுமதி கொலை வழக்கில் சுரேஷ் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்