என்ன கேவலம் இது...இதெல்லாம் தேவையா! சின்மயியியை மறைமுகமாக திட்டிய பழம்பெரும் நடிகை

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ வாயிலாக வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.

டுவிட்டர் வாயிலாக சின்மயி கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி ஒரு பேட்டியில் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயியை மறைமுக சாடியுள்ளார்.

ஒரு கீழ்த்தரமான ஒரு விளம்பரத்திற்காக இப்படி நடந்துகொள்கிறார்கள். என்ன கேவல இது...என்றோ நடந்த சம்பவம்.....இதெல்லாம் இன்று தேவையா

உனக்கு அப்போ அது suit ஆச்சு நீ வாயை மூடிக்கொண்டிருந்தாய். உன் குடும்பத்தை தான் இது புண்படுத்துகிறது. இலை மறைவா, காய் மறைவா இருந்தால் தான் அது வாழ்க்கை.

ஒருவன் உன் பின்னாடி வந்தான்,கையை பிடிச்சு இழுத்தான். அதைதான் இப்போ நிரூபிக்கிறாய் நீ . இதெல்லாம் சொன்னா உனக்கென்ன மரியாதை கிடைக்கும்.

சொல்லக் கூடாத விஷயம் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கலாம். அதற்காக அதனை மூடி மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அதனை விளம்பரப்படுத்த வேண்டாம்.

பெரிய அரசியல்வாதிகளையோ, பிரபலமானவர்களையோ சர்ச்சையில் சிக்க வைப்பதால் மட்டும் பெரிய ஆளாக ஆகிவிட முடியாது. அதுதான் கேவலம்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...