மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை: சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா
1019Shares

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த வியாழனன்று டெல்லியில் அமைந்துள்ள குறிப்பிட்ட சிறுமிகள் காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் பெண்கள் ஆணையம் உறுப்பினர்கள்.

இதில் அங்குள்ள 6 முதல் 15 வயது வரையான சிறுமிகளுடன் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த காப்பகத்தின் கட்டுப்பாடுகளை மீறும் சிறார்களுக்கு கடுமையான தண்டனைகளை காப்பக ஊழியர்கள் வழங்குவதாக தெரியவந்துள்ளது.

இந்த தண்டனைகளுக்கு பயந்து பெரும்பாலான சிறுமிகள் அடிமை வாழ்க்கை வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

இளம்பெண்களை துணி துவைப்பதற்கும், அறைகளை சுத்தம் செய்வதற்கும், கழிவறை சுத்தம் செய்வதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

போதிய ஊழியர்கள் அந்த காப்பகத்தில் இல்லாததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

22 சிறுமிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்குமாக ஒரே ஒரு சமையல்காரரே பணியில் இருந்துள்ளார்.

சின்னக் குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர். கோடை மற்றும் குளிர் கால விடுமுறைகளுக்கும் அவர்களை உறவினர்களிடம் அனுப்ப அந்த காப்பக நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.

கொடுமையின் உச்சமாக, பல சிறுமிகளும் தண்டனையாக மர்ம உறுப்பில் மிளகாய் தூள் பயன்படுத்தப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வுரிவான விசாரணைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்