தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தல்! லட்சக்கணக்கில் மதிப்பு...அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தப்பட்டு, அங்கிருந்து தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு படகுகளில் கஞ்சா கடத்தப்படுவதாகத் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு அருகில் உள்ள கட்டப்பாடு கடற்கரைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகளைக் கண்டதும் லாரியில் இருந்த டிரைவர், கிளீனர் இரண்டு பேரும் லாரியை அங்கு விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் இருந்த 6 மூட்டைகளில் 181 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, லாரியையும் 181 கிலோ கஞ்சா மூட்டைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சுங்கத்துறையில் தூத்துக்குடி பிரிவு உதவி ஆணையர் ஜெயபாரதி கூறுகையில், கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 27 லட்சம் ஆகும். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers