இறந்ததாக கருதப்பட்ட இளைஞர் காதலியுடன் தனிக்குடித்தனம்: பிஞ்சு குழந்தையுடன் கதறும் மனைவி

Report Print Arbin Arbin in இந்தியா

மனைவி மற்றும் குழந்தையை கைவிட்டு காதலியுடன் திட்டமிட்டு தலைமறைவான கேரள இளைஞரை பொலிசார் காதலியுடன் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தியாவின் கேரள மாநிலம் குற்றியாடி பகுதியில் குடியிருந்து வருபவர் சந்தீப். இவர் மராட்டிய மாநிலம் மும்பை நகருக்கு தமது இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாக குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில் பொலிசாரும் சந்தீப் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருப்பினும் சந்தீபின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த நவம்பர் 24 ஆம் திகதி சந்தீப் கேரளாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். சாலை வழியாக தமது இருசக்கர வாகனத்தில் சந்தீப் அடிக்கடி இதுபோன்று நீண்ட தூர பயணம் மேற்கொள்வதால் குடும்பத்தாருக்கும் மனைவிக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

இதே வேளையில், நவம்பர் 27 ஆம் திகதி சந்தீபின் காதலியும் தமது பணியிடத்திற்கு திரும்பிச் செல்வதாக கூறி மும்பை நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனிடையே இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட சந்தீப் துங்கபத்ரா ஆற்றின் அருகே, வனப்பகுதியில் தமது வாகனம் விபத்துக்குள்ளானது போன்று தடயங்களை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சந்தீபின் இருசக்கர வாகனம் துங்கபத்ரா நதிக்கரையில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டு, சந்தீப் கொல்லப்பட்டதாக பொலிசார் வழக்கை முடித்துள்ளனர்.

ஆனால் சந்தீபின் காதலியான அஸ்வினி மாயமானதாக அவரது பெற்றோர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சந்தீப் மும்பையில் புதிதாக இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியதும், காதலியான அஸ்வினியுடன் தனிக்குடித்தனம் நடத்துவதும் தெரியவந்துள்ளது.

சந்தீபுக்கு கடைசியாக மும்பையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சந்தீப் பயன்படுத்தும் மொபைல் செயலிகளை கண்காணித்து வந்த பொலிசார் இருவரை திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

தமது மனைவி மற்றும் குடும்பத்தினர் எவரும் தேடக்கூடாது என்பதாலையே கொல்லப்பட்டதாக தடயங்களை உருவாக்கியதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...