இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள்.. தாய் செய்த செயலால் விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு தனிஷ்கா (8), தனுஷ்கா (6), துர்கா (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை கார்த்திகா மற்றும் அவரது 3 மகள்கள் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயக்கமடைந்து கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நால்வருக்கும் தீவிர சிகிச்சையளிக்கபப்ட்டு வருகிறது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கார்த்திகா 3 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கார்த்திகாவின் கணவர் வீரபாண்டிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றிரவும் வீரபாண்டி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் சத்தம் போட்டதையடுத்து வீரபாண்டி அங்கிருந்து சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திகா, தனது 3 மகள்களுக்கும் நேற்றிரவு சாப்பாட்டுடன் அரளி விதையை அரைத்து கலந்து கொடுத்து விட்டார். அதனை 3 மகள்களும் சாப்பிட்ட பின்னர் அவரும் வி‌ஷம் கலந்த உணவை சாப்பிட்டார்.

இதையடுத்து கார்த்திகாவும் அவர் மகள்களும் இரவு முதல் அதிகாலை வரை உயிருக்கு போராடியுள்ளனர்.

காலையில் பொதுமக்கள் பார்க்கவே 4 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers