ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் நாய்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் புதுக்கோட்டையில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பாலூட்டி வருகிறது.

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது, மக்கள் பலரும் வீடுகளை இழந்து துயரப்படும் நிலையில் விலங்குகளும் இறந்து போயின.

இந்நிலையில் அன்னமலை அருகே மலைகிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் நாய் ஒன்றையும், ஆட்டையும் வளர்த்து வந்தார்.

புயலின் போது தப்பிப் பிழைத்த ஆடு ஒரு குட்டியை ஈன்றது, எனினும் நான்கு நாட்களில் ஆடு இறந்து போனதால் சோகமாய் இருந்தார் துரைசாமி.

தாயை இழந்து பட்டினியாய் தவித்த ஆட்டுக்குட்டிக்கு நாய் தினமும் பாலூட்டி வருகிறது, முதலில் நாய் ஆட்டை கடித்து விடுமோ என பயந்த நிலையில், அன்புடன் அரவணைத்து பாலூட்டி வருகிறதாம்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers