ஏலியன் என அழைக்கும் மக்கள்! காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என உருக்கம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் விசித்திர நோய் காரணமாக ஏலியன் உருவத்துடன் வாழும் இளைஞரை பலரும் அந்த பெயரை வைத்தே அழைத்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சூ குமார் (22). இவருக்கு சிறுவயதிலிருந்தே விசித்திர நோய் ஏற்பட்ட காரணத்தில் இவரின் கண்கள் விரிவடைந்து, தலை மட்டும் பெரிதாக என பார்ப்பதற்கு அப்படியே ஏலியன் போலவே உள்ளார்.

இது குறித்து அன்சூகுமார் கூறுகையில், நான் பிறக்கும்போதே இப்படி தான் பிறந்தேன், அப்போது இந்த நோய்க்கு மருந்துகள் இல்லை என மருத்துவர் என் பெற்றோரிடம் கூறிவிட்டார்.

நான் 9 மணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன், எனக்கு மாதம் £50 தான் வருமானம் வருகிறது.

இதை வைத்து என்னால் மருத்துவம் பார்க்கமுடியவில்லை, என்னை பலரும் வேற்று உலகை சேர்ந்தவன் என நினைத்து விடுகிறார்கள்.

எனக்கு ஏலியன் என்பது தான் பட்டப்பெயர், என் மருத்துவ செலவுக்கு அரசு தான் உதவி செய்யவேண்டும்.

எனக்கும் எல்லோரையும் போல சாதாரண மனிதனாக இருக்க வேண்டும் என்பது தான் எண்ணம்.

என்னுடையை பிரச்சனை சீக்கிரம் சரியாகி, நான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதே என் உச்சக்கட்ட கனவு என கூறியுள்ளார்.

Caters News Agency

Caters News Agency

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers