என்னை கொன்னுடுவாங்க... இறப்பதற்கு முன்னர் புதுப்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

தெலுங்கானாவில் வேறு சாதி நபரை திருமணம் செய்ததற்காக கொலை செய்யப்பட்ட புதுப்பெண் இறுதியாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

மாநிலத்தின் மான்சீரியல் பகுதியை சேர்ந்தாவர் அனுராதா (22). இவர் லட்மண் (26) என்ற நபரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

லட்மண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அனுராதா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

எதிர்ப்பை மீறி கடந்த 3-ஆம் திகதி இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த மூன்று வாரத்தில் அனுராதாவின் பெற்றோர், அவர் வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை எரித்துள்ளனர். இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் புதுப்பெண் அனுராதா இறப்பதற்கு முன்னர் செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், என்னை கொன்றுவிடுவார்கள் என பயமாக உள்ளது, எனக்கு எதாவது நேர்ந்தால் என் பெற்றோரே காரணம்,

நான் என் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...