அம்பிகா மீது மோகம்... அவரது கணவரை கொன்றது ஏன்? கள்ளக்காதலனின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதலியை சந்திக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரத்தில் அவரது கணவரை கொன்றதாக நபர் ஒருவர் வாக்குமூம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டையை சேர்ந்தவர் மாதேஷ், தறி தொழிலாளியான இவரது மனைவி அம்பிகா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக மாதேசுக்கு தெரியவந்தது, எனவே இருவரையும் கண்டித்துள்ளார்.

எனினும் இதுதொடர்ந்து கொண்டே இருந்ததால், பஞ்சாயத்தை கூட்டி அம்பிகாவை இனி சந்திக்க மாட்டேன் என ராமமூர்த்தி சொல்லும்படி செய்துள்ளார்.

இதனால் ராமமூர்த்தி கடும் கோபத்தில் இருந்துள்ளார், இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மாதேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக அம்பிகாவிடம் விசாரணை நடத்திய பொலிசார், ராமமூர்த்தியை பிடித்து விசாரித்தனர்.

பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ராமமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், எனக்கும் அம்பிகாவுக்கு கடந்த 8 ஆண்டுகளாகவே கள்ளத்தொடர்பு இருந்தது, இதுதெரிந்த மாதேஷ் எங்களை கண்டித்தார்.

ஒருகட்டத்தில் பஞ்சாயத்திலும் நிற்க வைத்தார், இதனால் சில காலம் அம்பிகாவை சந்திக்காமல் இருந்து வந்தேன், ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை.

சம்பவதினத்தன்று எனது மாடு மாதேஷின் நிலத்தில் மேய்ந்தது, அதை அவர் விரட்ட இதையே காரணமாக கொண்டு அவருடன் சண்டையிட்டேன்.

ஒருகட்டத்தில் நானும், என் நண்பன் முரளியும் மாதேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றோம்.

மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தபோது பொலிசிடம் மாட்டிக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மூவரையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers