பிரபல மூத்த திரைப்பட நடிகை காலமானார்: சோகத்தில் திரையுலகம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த திரைப்பட நடிகை கேஜி தேவகி அம்மா தனது 97-வது வயதில் காலமானார்.

மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் ஏராளவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவகி அம்மா.

கிலுக்கம், வக்காலத்து நாராயணன்குட்டி, கொட்டாரம் போன்ற திரைப்படங்களில் தேவகியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ரேடியோவில் ஒலிப்பரப்பாகும் நாடகங்கள் மூலமும் இவர் மக்களிடையே புகழ்பெற்றார்.

இந்நிலையில் வயது முதிர்வு நோய்கள் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவகி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரின் உயிர் பிரிந்தது.

தேவகியின் இறுச்சடங்குகள் சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. தேவகியின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...