20 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்ட அப்பா: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்ற மகளிடம் தந்தை தவறாக நடந்து கொண்ட நிலையில் மனைவியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் சதாசிவன் ரெட்டி. இவருக்கும் ஷோபா என்ற பெண்ணுக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.

ஷோபாவை மணந்த 5 ஆண்டுகளிலேயே மதுவுக்கு அடிமையான சதாசிவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இதையடுத்து வேறு பெண்ணுடன் தங்கிய சதாசிவன் எப்போதாவது மதுபோதையில் ஷோபா வீட்டுக்கு வந்து அவரையும், மகளையும் அடித்து உதைப்பார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷோபா வீட்டுக்கு வந்த சதாசிவன், பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷோபா மகளை காப்பாற்ற, சதாசிவத்தை மரக்கட்டையால் ஓங்கி அடிக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சதாசிவன் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers