15 ஆண்டுகளில் 9,000 கருக்கலைப்பு செய்த பெண்: பாய்ந்தது குண்டர் சட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆண்டுகளில் 9,000 கருக்கலைப்பு செய்துள்ள பெண் ஒருவர் மீது குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனந்தி என்ற பெண் தனது வீட்டில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் வைத்திருந்தார் என்பதற்காகவும், சட்டவிரோதமாகக் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து, பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்த குற்றத்துக்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்தவர், மீண்டும் அதே வேலையைத் தொடர்ந்து செய்ய 2016-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி, மீண்டும் கருக்கலைப்பு தொழிலை செய்து வந்துள்ளார்.

ஒரு நாளைக்கு 10 முதல் 20 பெண்கள் கருவைக் கலைக்க ஆனந்தியிடம் வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆனந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க ஆனந்தியை 'குண்டர் சட்டத்தில்' கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எஸ்.பி சிபிசக்கரவர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers