திருமண நேரத்தில் ஓடிபோன மணமகன்.. வேறு பெண்ணுடன் திருமணம்! மணப்பெண் கதறல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமண நேரத்தில் மணமகன் ஓடி போன நிலையில் வேறு பெண்ணை மணக்க அவர் குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை வாங்கியது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கடிரி நகரை சேர்ந்தவர் முகமது ரபி, இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய நாளான புதன்கிழமை பெண் வீட்டரிடம் இருந்து தங்க கட்டிகளை வரதட்சணையாக பெற்ற ரபி, பின்னர் அது சுத்தமான தங்கம் கிடையாது என அவர்களுடன் சண்டை போட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி இந்த பிரச்சனையை சரி செய்தார்கள்.

அப்போது பெண் வீட்டார் கூறுகையில், திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் செலவு செய்தோம், மேலும் ரூ 3 லட்சத்துக்கு தங்கம் வாங்கி கொடுத்தோம் என கூறினர்.

இந்நிலையில் திருமணம் நடக்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் மணமகன் ரபிக் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து பெண் வீட்டாரும், மணப்பெண்ணும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் கூடுதலாக கிடைத்த ரூ.50,000 பணத்துக்காக ரபிக் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது.

சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers