காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரது மகன் விக்னேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் தந்தைக்கு விக்னேஷின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷின் தந்தை சுந்தரராமனிடம் இதுகுறித்து கூறி மகனை கண்டித்து வைக்கும்படி பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சுந்தரராமன் மகனை விக்னேஷை கண்டித்ததுடன் குறித்த பெண்ணை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். சுந்தரராமனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சுந்தரராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers