மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பள்ளி மாணவன்: சென்னையில் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் வீட்டின் மொட்டை மாடியில் பத்தாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் பாபு (15).

10ஆம் வகுப்பு மாணவரான இவர் நேற்று ஸ்பெஷல் கிளாஸ் முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தபின்னர் மொட்டை மாடிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்து மர்ம நபர்கள் 2 பேர் இந்த மாடிக்கு எகிறி குதித்து வந்தனர்.

அங்கு நின்று கொண்டிருந்த பாபுவை திடீரென சரமாரியாக கத்தியால் 16 இடங்களில் குத்தினார்கள்.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய பாபுவின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அங்கு குடியிருக்கும் எல்லோருமே மொட்டை மாடிக்கு வந்தனர்.

அப்போது பாபு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் பாபுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers