5 வருட காதல்! திருமணமான 2 மணி நேரத்தில் தாலியை கழற்றிய கணவன்.. இறுதியில் நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 2 மணி நேரத்தில் மனைவியின் தாலியை கணவன் கழட்டிய நிலையில், தற்போது மீண்டும் அவரையே இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பொலி (25) என்ற பெண்ணும், செல்லதுரை (28) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி கோயிலில் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.

அப்பொழுது செல்லதுரையின் தாயார் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக தகவல் வந்தது.

இதையடுத்து, தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிய செல்லதுரை திருமணமான 2 மணி நேரத்தில் மனைவின் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றிவிட்டு இரண்டு நாளில் வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறி சென்றுள்ளார்.

அதன் பின்பு செல்லதுரை பேசுவதை தவிர்த்ததால் அதிர்சியடைந்த சிலம்பொலி இது குறித்து கடந்த 17ம் திகதி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிசர் நடவடிக்கை எடுக்காததால் சிலம்பொலி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் செல்லதுரை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் வீடு பூட்டியிருந்துள்ளது. இதனால் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அழைத்து வந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் நேற்று விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பெற்றோர்கள் வராத நிலையில் செல்லதுரை, சின்னகண்டியாங்குப்பம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சிலம்பொலி உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால் தெற்கு பெரியார் நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில் செல்லதுரை, சிலம்பொலிக்கு மீண்டும் திருமணம் நடந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...