17 வயது பெண்ணுடன் 80 வயது அரசியல்வாதி: பாலியல் வீடியோ வெளியானதால் அரசியலில் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆந்திராவில் 80 வயது அரசியல் பிரமுகர் நல்லி சாதுராவ் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தெலுங்கு சேத கட்சியின் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினராக இருக்கிறார் நல்லி சாதுராவ். இவர் இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி ஆந்திர மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சாதுராவ் அனுகியுள்ளார். அவர்களுக்கு மாநில அரசின் திட்டம் மூலம் பண ஆசை காட்டியுள்ளார்.

உதவி செய்வதாக கூறி இளம் பெண்களை தனது கட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரின் இந்த செயல்பாடு அருகில் இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் இவருடன் இருக்கும் சிலர் இவரது பாலியல் சேட்டையை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காக, இவரது அலுவலகத்தில் கமெராவை பொருத்தியுள்ளனர். இதனால் சாதுராவின் கேவலமான செயல் அம்பலமாகியுள்ளது.

இவரின் இந்த வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers