பிழைப்புக்காக வேறு இடத்துக்கு சென்ற இளைஞர்: ஒரே நாளில் லட்சாதிபதியான ஆச்சரியம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் வேலை செய்து வந்த நிலையில் லாட்டரியில் அவருக்கு ரூ. 65 லட்சம் பரிசு விழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பப்ளூ புர்மன் (28). திருமணமாகாத இவர் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்தார்.

லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட பப்ளூ சமீபத்தில் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார்.

இதில் அவருக்கு முதல் பரிசான ரூ. 65 லட்சம் விழுந்துள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளார் பப்ளு.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசாக இதை கருதுகிறேன்.

லாட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers