இளைஞனை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்! பொலிசாரிடம் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், பெயர் தெரிவிக்கப்படாத பெண்ணை வாலிபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த நபர் இவரை கிண்டல் செய்வது, தொந்தரவு செய்வது போன்று இருந்துள்ளார்.

இனி இப்படியே விட்டால், இது சரிபட்டவராது என்று அந்த பெண் தன் இரண்டு நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

அதன் பின் அந்த நபரை Dombivali பகுதி அருகே இருக்கும் இரயில்வே பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த இரண்டு நண்பர்கள் மற்றும் இவர், அந்த நபரை மரத்திக் கட்டி வைத்து அடித்து அதன் பின் அவருடைய மர்ம உறுப்பை வெட்டியுள்ளனர்.

இதனால் அந்த நபர் துடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவர விரைந்து வந்த பொலிசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இது குறித்து முதல் கட்ட விசாரணையில் கேட்ட போது, நடந்தவற்றை கூறி, இனி இது போன்ற செய்யக் கூடாது, பாடம் கற்பிப்பதற்காகவே இப்படி செய்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

பாதிப்புக்குள்ளான நபருக்கு அதிக அளவில் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers