என் தம்பியை இழந்துவிட்டேன்... அவன் இறந்துவிட்டான் என்பதை நம்பமுடியவில்லை: கிரேஸி மோகன் உருக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார்.

1989-ல் ’வருஷம் 16’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.

சீனு மோகன் குறித்த நினைவுகளை கிரேஸி மோகன் கூறியதாவது, என்னோட சொந்தத் தம்பி மாதிரிங்க சீனு. அவனுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

சமீபத்தில், இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சீனுவைப் பார்த்துப் பேசினேன். ரொம்ப நல்லாத்தான் இருந்தான். நல்லா பேசிக்கிட்டு இருந்தோம். இப்படி ஆகிப்போச்சு. ரொம்ப நாளா டிராமால நடிக்காமலே இருந்தான். சீனு இல்லாத டிராமா இனிமே எப்படிங்க என்னால போட முடியும்?

அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் நம்பவே முடியலை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers