80 வயது கணவன்...65 வயதில் குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் இந்தியாவின் வயதான தாய் என அழைக்கப்படுகிறார்.

Hakim Din (80) என்பவரின் மனைவிதான் குறித்த பெண். இவரது பெயர் வெளியிடப்படவில்லை.

இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 65 வயதில் இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

இது மருத்துவ உலகில் ஆச்சரியான ஒன்றுதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் அதிகமான பெண்களுக்கு 47 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறது.

மேலும், அதற்கு மேல் செல்லும் பெண்கள், குழந்தை இல்லாவிட்டாவில் IvF முறையில் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அப்படியிருக்கையில் சுகப்பிரசவம் மூலம் இவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். தந்தை கூறியதாவது, இது எங்களுக்கு அல்லா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers