இலங்கை அகதிகள் மீது நடவடிக்கை எடுங்கள்: தமிழகத்தில் போராட்டம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் ஈரோட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இலங்கை அகதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிலர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து வேறு முகாமிற்கு மாற்றக்கோரியும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பகுடுதுறை, சாமிநாதபுரம், அண்ணாநகர், அணைப்பூங்கா பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் பல வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers