ராணுவத்தில் இருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்: மனைவி செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மனைவியின் மனுவை தொடர்ந்து அவரின் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் (32).

ராணுவ வீரரான இவர் குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த அக்டோபர் மாதம் சொந்த ஊருக்கு வந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் திகதி இரவு தனது மனைவி மோகனாவுடன் தகராறு செய்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

மறுநாள் காலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பாலசுந்தரம் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து மோகனா கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாலசுந்தரத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனா திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தனது கணவர் பாலசுந்தரம் சாவில் சந்தேகம் உள்ளது என்று மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுந்தரம் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து புதைக்கப்பட்ட பாலசுந்தரம் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் டாக்டர் கமலக்கண்ணன், பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers