200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் - சுபிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

3-வது முறையாக சுபிதா கர்ப்பமடைந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, தான் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என கூறிய மணிகண்டன், மனைவி சுபிதாவை கடுமையாக அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுபிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணிகண்டன் ஏற்கனவே தனது தாய் பேபியிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணி மனைவியையும் அடித்தே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers